பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையை தூக்கி கொஞ்சிய தோனி


Abimukatheeesh| Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2017 (10:56 IST)
பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் குழந்தையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைப்பெற உள்ளது. 10 ஆண்டுகள் கழித்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேரடியாக இறுதிப்போட்டியில் மோதுவதால் இரு நாட்டு ரசிகர்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த போட்டியை காண அனைவரும் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
 
2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று நடைப்பெற உள்ள இறுதிப்போட்டியிலும் இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைராலி வருகிறது. இரு அணிகளும் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் இறுதிப்போட்டியை முன்னிட்டு நேற்று சந்திப்பு நடந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :