1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2015 (16:44 IST)

”தோனியின் சாதனையை யாரும் நெருங்க முடியாது” - ரவி சாஸ்திரி

ஒருநாள் போட்டிகளில் அவருடைய சாதனைகளையும், கேப்டன்சியையும் யாரும் நெருங்க முடியும் என்று நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
 

 
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி-20, நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டி-20 போட்டி வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி தொடங்க உள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறுகையில், ”ஒருநாள் போட்டிகளின் தலைசிறந்த வீரர்களுல் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். கேப்டனாக அவரின் சாதனைகள் அற்புதமானது.
 
ஒருநாள் போட்டிகளில் அவருடைய சாதனைகளையும், கேப்டன்சியையும் யாரும் நெருங்க முடியும் என்று நினைக்கவில்லை. இப்போது தனது பொறுப்பை மீண்டும் அவர் எடுத்துக் கொள்கிறார். இது ஒன்றும் புதிதல்ல. எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கிறது. வீரர்கள் அனைவரும் ஒரு சாம்பியனுக்கு கீழே விளையாடுகின்றனர்”
 
மேலும் அவர் கூறுகையில், “தென் ஆப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணியை எதிர்கொள்வது சவாலான விஷயம் ஆகும். அது ஒரு அற்புதமான அணி. அந்த அணியை அசைப்பது எளிதான விஷயம் அல்ல.
 
உலகின் வேறு எந்த அணியை காட்டிலும் தென்ஆப்பிரிக்கா தான் வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறது. புள்ளி விவரங்களே சான்று” என்று கூறியுள்ளார்.