தோனி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் - சவுரவ் கங்குலி மகுடம்

தோனி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் - சவுரவ் கங்குலி மகுடம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 24 டிசம்பர் 2015 (16:36 IST)
தோனி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்றும் சர்வதேச அரங்கில் அதன் தரத்தை நிர்ணயித்தவர் என்றும் முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
 
 
இது குறித்து கூறியுள்ள கங்குலி, “தோனி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் சர்வதேச அரங்கில் கிரிக்கெட்டின் தரத்தை நிர்ணயித்தவர். அவர், இந்திய அணிக்காக மேலும் சில ஆண்டுகள் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்” என்றார்.
 
2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தோனி தலைமை வகிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, “2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கு, கேப்டனை தேர்வு செய்ய நமக்குப் போதுமான கால அவகாசம் இருக்கிறது” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், ”சர்வதேச அரங்கில் கிரிக்கெட்டின் தரத்தை நிர்ணயித்த, தோனியின் இடத்தை ஒருவர் அடைவதற்கு கடினமான உழைப்பும், திறமையும் அவசியம்” என்றார்.
 
யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி-20 தொடரில் இடம்பெற்றது குறித்து கேட்கப்பட்டதற்கு, “அவர் சிறப்பான முறையில் விளையாடுவார். தன்னுடைய திறமையைக் நிரூபித்துக் காட்டுவார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :