1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 30 ஜனவரி 2016 (17:52 IST)

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கேப்டன் தோனி புதிய சாதனை

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் தோற்றது. இதனால் இந்திய கேப்டன் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.


 
 
இந்நிலையில் அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது தோனி தலைமையிலான அணி.
 
மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் தோனி வசம் இரண்டு சாதனைகள் வந்துள்ளன.
 
ஏற்கனவே தோனி அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு தொடர்களை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் தோனி. இந்த சாதனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து நிகழ்த்தப்பட்டது.
 
இந்த டி20 தொடரை வென்றதின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் தோனி தலைமையில் பெறும் இரண்டாவது தொடர் வெற்றி ஆகும். இதற்கு முன்னர் 2008-இல் தோனி தலைமையிலான அணி காமென்வெல்த் பேங்க் தொடரை கைப்பற்றியிருந்தது.
 
அனைத்து வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வென்ற மூன்றாவது தொடர் இதுவாகும். 1985-இல் சுனில் காவஸ்கர் தலைமையிலான அணி முதன் முதலாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடரை வென்றது.
 
மேலும் ஓர் சாதனையை படத்துள்ளார் இந்த தொடரின் மூலம் தோனி. அதிக பேரை ஸ்டெம்பிங் மூலம் அவுட் செய்த இலங்கை வீரர் குமார் சங்ககாராவின் சாதனையை தோனி முறியடித்துள்ளார்.
 
139 ஸ்டெம்பிங்குடன் குமார சங்ககாரா முதலிடத்தில் இருந்தார். தோனி மெல்போர்ன் போட்டியில் மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் ஃபால்க்னரை ஸ்டெம்பிங் மூலம் அவுட் செய்ததின் மூலம் 140 ஸ்டெம்பிங்குடன் முதலிடத்தில் உள்ளார்.