குழந்தைக்கு பாலூட்டும் கிறிஸ் கெய்ல்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (05:20 IST)
மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
 
 
மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், தற்போது கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். மேலும், ஜமைக்கா அணியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
 
சமீபத்தில் கிறிஸ் கெய்ல்- நடாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு கிறிஸ் கெய்ல் தனது பெண் குழந்தைக்கு ’யுனிவர்சல் பிரின்சஸ்’ என்று பெயர் சூட்டி இருந்தார்.
 
இந்நிலையில், கெய்ல் தனது மகளுக்கு புட்டிப் பால் கொடுக்கும் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதற்கு அவரது ரசிகர் ஒருவர், நீங்கள் அழகாக குழந்தையை பிடித்துள்ளீர் என்று பின்னூட்டம் இட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :