வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2015 (12:19 IST)

சிக்ஸர் விளாசலில் கில்கிறிஸ்டின் சாதனையை சமன் செய்த மெக்கல்லம்

டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசியதில் ஆஸ்திரேலியா வீரர் கில்கிறிஸ்டின் சாதனையை நியூசிலாந்தின் மெக்கல்லம் சமன் செய்துள்ளார்.
 

 
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதன் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கணா ஹெராத் வீசிய ஓவரில், நியூசிலாந்து அதிரடி வீரர் பிரண்டன் மெக்கல்லம் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
 
இதன் மூலம், டெஸ்ட் போட்டிகள் விளாசியவர்கள் பட்டியலில் பிரண்டன் மெக்கல்லம், ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் உடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
பிரண்டன் மெக்கல்லம்  98 போட்டிகளில் விளையாடி [170 இன்னிங்ஸ்கள்] 100 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அதே சமயம் 96 போட்டிகளில் விளையாடி [137 இன்னிங்ஸ்கள்] ஆடம் கில்கிறிஸ்ட் 100 சிக்ஸர்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 3ஆவது இடத்தில் கிறிஸ் கெய்ல் [98 சிக்ஸர்கள்] உள்ளார்.