விக்கெட் எடுக்க முடியாமல் இந்தியா திணறல்: பாகிஸ்தான் சிறப்பான தொடக்கம்!

விக்கெட் எடுக்க முடியாமல் இந்தியா திணறல்: பாகிஸ்தான் சிறப்பான தொடக்கம்!


Caston| Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2017 (16:09 IST)
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகின்றது.

 
 
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியென்றால் எப்பவுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. தற்போது பல வருடங்களுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஐசிசி நடத்தும் போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாடுவதால் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
 
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் சமன் மற்றும் அசர் அலி களம் இறங்கினர்.
 
இந்த தொடக்க ஜோடி பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து ஆடி வருகிறது. இவர்களின் கூட்டணியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர். 15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 86 ரன் எடுத்து விளையாடி வருகின்றது. அசர் அலி 40 ரன்னும், ஃபகர் சமன் 33 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :