இரண்டாவது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி


Caston| Last Modified வெள்ளி, 15 ஜனவரி 2016 (16:56 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது.

 
 
முதல் ஒருநாள் போட்டியை இழந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. ரோகித் சர்மா 124 ரன்கள், விராட் கோஹ்லி 59 ரன்கள், ரஹானே 89 ரன்கள் எடுத்து இந்திய அணி 308 ரன்கள் எடுத்து 309 இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது.
 
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மிகவும் நேர்த்தியாகவும், பொருமையாகவும் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மார்ஷ் மற்றும் ஃபின்ச் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 145 ரன்கள் குவித்தது.
 
71 ரன் எடுத்த போது ஃபின்ச் வெளியேறினார். பின்னர் மார்ஷும் 71 ரன்னில் வெளியேற, ஸ்மித், பெய்லி கூட்டணி சிறப்பான கூடணியை தந்தனர். இந்த கூட்டணி 78 ரன் சேர்த்து, ஸ்மித் 46 ரன்னில் வெளியேறினார்.
 
வெற்றி இலக்கான 309 ரன்னை ஆஸ்திரேலிய அணி 49 வது ஓவரில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெய்லி 76 ரன்னிலும், மேக்ஸ்வெல் 26 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :