வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By ashok
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2015 (12:44 IST)

ஆஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் திடீர் ஒய்வு

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் செய்தியாளர்களை சந்தித்து தனது ஒய்வு முடிவை அறிவித்தார்.
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது  போட்டியுடன் விலகினார். பின்னர் இளம் விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அணியின் விக்கெட் கீப்பர்கான இடத்தை தக்க வைத்து கொண்டார். இதனால் பிராட் ஹேடினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவர்  டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். சிட்னியில் தனது குடும்பத்தினருடன் செய்தியாளர்களை சந்தித்து தான் ஒய்வு பெறுவதாகவும்,17 ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.  இதனால் ஓய்வு முடிவை மேற்கொள்வது எனக்கு கடினமாக தெரியவில்லை என்றும், 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பாக இந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

37 வயதாகியுள்ள பிராட் ஹேடின் இதுவரை 66 டெஸ்ட் போட்டியில் விளையாடி 3,266 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 270 பேரை ஆட்டம் இழக்க செய்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணியிலிருந்து  ஓய்வு பெறும் 4–வது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.. ஏற்கனவே கேப்டன் மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன், கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோர் ஓய்வு பெற்று பெற்றுள்ளனர்.