வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 2 பிப்ரவரி 2015 (12:03 IST)

முத்தரப்பு கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி ஆரோன் பிஞ்ச் 112 ரன் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்தை பந்தாடியது.
முத்தரப்பு போட்டியில் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர்.
 
இதில் ஆரோன் பிஞ்ச் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் சுமித் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடக்கூடிய வார்னர் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். 
பின் இணைந்த பெய்லி 2 ரன்னிலலிம், சுமித் 40 ரன்னில் மொய்ன் அலி பந்திலும் ஆட்டம் இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. பின்னர் மேக்ஸ்வெல் – மார்ஷ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். மேக்ஸ்வெல் 95 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் மார்ஷ் 60 ரன்கள் எடுத்த போது ரன்அவுட் ஆனார். பின்னர் வந்த பல்க்னெர் ஆக்ரோஷமாக விளையாட இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. 
 
பின் இங்கிலாந்து அணி தங்கள் இன்னிங்சை தொடங்கியது. இதில் பெல் 8 ரன்களில் வெளியேறினார். பின்னர் டெய்லர் 4 ரன்கள், மார்கன் டக் அவுட் ஆகி வெளியேறினர். பின் வந்த வீரர்களும் வரிசையாக ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 39.1 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. இதனால் ஆஸ்திரேலிய அணி 112 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது.