வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (12:30 IST)

நியூசிலாந்துக்கு ஆஸ்திரேலியா பதிலடி; டேவிட் வார்னர் அதிரடி

டேவிட் வார்னரின் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது.
 

 
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி வெலிங்க்டனில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது.
 
அதிகப்படியாக வில்லியம்சன் 60 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 45, ஆடம் மில்னே 36 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜேம்ஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட், ஆடம் ஷம்பா, மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர், 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 46.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா 50 ரன்களும், டேவிட் வார்னர் 98 ரன்களும் குவித்தனர்.
 
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் கொடுத்தனர். ஆனால், அடுத்து வந்த ஸ்மித் 2, ஜார்ஜ் பெய்லி 0, மேக்ஸ்வெல் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறியதால் சிறிது தடுமாற்றத்திற்கு உள்ளானது.
 
ஆனால், மார்ஷ் வந்ததும் நிலைமை மாறியது. அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்களும், ஹாஸ்டிங் 48 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளன. 3ஆவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.