ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்: 79/0 (17.0)


Caston| Last Modified வெள்ளி, 15 ஜனவரி 2016 (14:09 IST)
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 309 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

 
 
இந்தியாவின் இமாலய இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.
 
இந்திய வீரர் ரோகித் சர்மா 125 ரன்களும், ரஹானே 89 ரன்களும், விராட் கோஹ்லி 59 ரன்களும் குவித்து இந்திய அணியை 300 ரன்களுக்கு மேல் ரன் குவிக்க உதவி செய்தனர். கேப்டன் தோனி 11 ரன் எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
 
இந்தியாவின் 309 ரன் இலக்கை நோக்கி ஆடும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் மார்ஷ், ஆரோன் ஃபின்ச் ஆகியோர் பொருமையாக விளையாடி வருகின்றனர். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறவே பொருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
தற்போது 17 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 79 ரன் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகின்றது. மார்ஷ் 40(47), ஃபின்ச் 30(55) ரன் எடுத்து களத்தில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :