1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 9 ஜூன் 2025 (10:33 IST)

கோலி, ரோஹித்துக்குப் பிரியாவிடை கொடுக்க முடிவுசெய்துள்ளதா ஆஸி. கிரிக்கெட் வாரியம்?

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.  ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பைத் தொடரோடு அவர்கள் டி 20 வடிவப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றனர்.

தற்போது அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நாள் தொடரில் விளையாட செல்கிறது, அப்போது ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருக்கும் விடைகொடுக்கும் விதமாக அவர்களைக் கௌரவிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏனென்றால் இதன் பிறகு அவர்கள் ஆஸி அணிக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட செல்லமாட்டார்கள். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் முறையாக விடைகொடுக்கவில்லை என இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வாரியம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.