வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 31 மார்ச் 2016 (13:25 IST)

தோனி, கோலி, ரெய்னாவை பலாத்காரம் செய்வேன்: எச்சரிக்கைவிடும் விளம்பர நடிகை அர்ஷி கான்! (வீடியோ இணைப்பு)

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.


 
 
பின்னர் வங்கதேசம் அணியுடன் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியையும் ஆஸ்திரேலியா அணியையும் புரட்டி போட்டது இந்தியா. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி மீது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க பல நடிகைகள் தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசாக அனுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் மும்பையை சேர்ந்த விளம்பர நடிகை அர்ஷி கான் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் தோனி, விராட் கோலி, ரெய்னா ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என எச்சரிக்கை விடுத்தூள்ளார்.

 

 
 
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்லவில்லை என்றால் கேப்டன் தோனி, கோலி, ரெய்னா ஆகியோரை அர்ஷி கான் ஆகியா நான் பலாத்காரம் செய்வேன் என அந்த வீடியோவில் அவர் எச்சரித்துள்ளார்.