கோலிக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருக்கும் இங்கிலாந்து வீராங்கனை


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 15 மார்ச் 2016 (16:06 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம், என்னை திருமணம் செய்துகொள்வீர்களா என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியல் யாட் கேட்டிருந்ததை மீண்டும் நினைவுபடுத்தி உள்ளார்.
 
 
கடந்த 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டியில், டாக்காவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 
அந்த போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 172 ரன்கள் குவித்தது. பின்னர், இலக்கை துரத்திய இந்திய அணியில் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் [5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 72 ரன்கள் எடுத்து வெற்றியை ஈட்டித்தந்தார். இந்த ஆட்டம் பலரது பாராட்டுதலையும் பெற்றது.
 

 
அப்படி வியந்தவர்களில் ஒருவரான இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியல் யாட்டும் ஒருவர். அவர் அந்த ஆட்டத்தைப் பார்த்து பிரமித்து உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் ’கோலி, என்னை திருமணம் செய்துகொள்வீர்களா?’ என்று கேட்டிருட்ந்தார்.
 
பிறகு இங்கிலாந்து இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றிருந்தபோது, விராட் கோலியும், டேனியல் வாட்டும் சந்தித்துக் கொண்டனர்.
 

 
இந்த சம்பவம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 10 சுற்றுகள் தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் டேனியல் வாட் மீண்டும் ஒரு ட்வீட் செய்துள்ளார்.
 
அதில், ’இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும் மக்கள் இன்னும் அதற்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :