வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2015 (11:00 IST)

முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா – ஜிம்பாப்வே பலப்பரிட்சை

இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
 
இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் 3 ஒரு நாள் போட்டி, 2 டி20 கிரிக்கெட் போட்டி ஆகியவைகள் அடங்கும். மூத்த வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இத்தொடருக்கு இளம் வீரர் ரகானே தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி ஹராரேயில் இன்று தொடங்கவுள்ளது. இதில் கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளவுள்ளது. கடைசியாக நடைபெற்ற வங்கதேச தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததால் தற்போது பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. ஒருவேளை  இத்தொடரை இந்திய அணி இழந்துவிட்டால் தரவரிசைப்பட்டியலில் சற்று இறக்கம் காண நேரிடும்.
 
இந்திய அணியில் தமிழக வீரர் முரளிவிஜய், உத்தப்பா ஆகிய வீரர்கள் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அணியில் ஹர்பஜன்சிங் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்தினால் மட்டுமே தனது இடத்தை மேலும் தக்க வைக்க முடியும்.
 
மேலும் ஜிம்பாப்வே அணியில் சிபாண்டா, மசகட்சா, சிகும்புரா, கிரேமி கிரிமர், உத்செயா, பிரையன் விடோரி போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு சவால் விடுக்க காத்திருக்கின்றனர்.