'அரசியல் எங்கள் ஆட்டத்தின் நேர்த்தியை குறைக்காது'

Webdunia|
FILE
இலங்கை வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்காதது தங்களின் ஆட்டத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படு‌த்‌திவிடாது எ‌ன்று ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார சங்கங்கரா கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக ஏப்ரல் 3ஆம் தேதி துவங்க இருக்கும் 6வது ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலங்கை வீரர்கள் சென்னை போட்டிகளில் பங்கேற்க்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார சங்கங்கரா, இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அரசியல் எங்களை சென்னையில் விளையாடுவதிலிருந்து தடுத்துள்ளது.

ஆனால், இத்தகைய தடையால் எங்களின் ஆட்டதிற்கோ, இந்த விளையாட்டின் மீது நாங்கள் கொண்டுள்ள பற்றிற்கோ எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. இந்தியா என்பது வெறும் சென்னை மற்றும் தமிழ் நாடோடு முடிவது அல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களில் மக்கள் எங்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். நாங்களும் எங்களின் திறமைகளை நிரூபிக்க தயாராக உள்ளும் என கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :