ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் ஆட்டம் குறித்து வெட்கப்படுகிறேன்: கபில்தேவ்

புதுடெல்லி| Webdunia|
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆட்டம் குறித்து தாம் மிகவும் வெட்கப்படுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

கேப்டன் டோனி தலைமை யிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்ட்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 டெஸ்டிலும் இந்தியா படுதோல்வி அடைந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கபில்தேவ், இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தை பார்த்து ஒரு கிரிக்கெட் வீரர் என்ற முறையில் நான் மிகவும் வெட்கப்படுகிறேன் என்றார்.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இந்தியா மிக மோசமாக விளையாடுகிறது. அவர்கள் எல்லா வகையிலும் தவறாக விளையாடுகிறார்கள்.

உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்து இந்தியா 6 மாதம் மட்டும் நன்றாக விளையாடியது. தற்போது அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. நான் வீரர்கள் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
இதே வீரர்கள் தான் கடந்த காலங்களில் பெருமைப்படும்படி நன்றாக விளையாடினார்கள். இப்போது அவர்கள் ஆட்டம் எடுபட வில்லை என்றால் என்ன வென்று சொல்வது.

திறமையான வீரர்கள் அணியில் இருக்கிறார்கள்.வீரர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையுடன் விளையாட வேண்டும் என்று மேலும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :