என்னை ஏமாற்றி பல முறை உறவுகொண்டார்-பாக்.நடுவர் ஆசாத் ராஃப் மீது மும்பை மாடல் அழகி புகார்

Webdunia|
மும்பையில் உள்ள மாடல் அழகி லீனா கபூர் பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராஃப் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பல முறை உறவு கொண்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து லீனா கபூர் அளித்துள்ள புகாரில், பாகிஸ்தன நடுவர் ராஃப் உடன் 6 மாதங்களுக்கு முன்பாக ஒரு பொது நண்பர் மூலமாக தொடர்பு ஏற்பட்டது, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடுவர் பணியாற்ற அவர் இந்தியா வரும்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. அவருக்கு 2 குழந்தைகள் மனைவி இருந்தும் தன்னை திருமணம் செய்து கோள்கிறேன் என்று பல முறை உறுதி அளித்தார். மேலும் தான் சார்ந்த சமயம் ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்கிறது என்று கூறினார்.
ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை இதனால் புகார் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இவர் புகார் மீது விரைவில் மும்பை போலீஸ் விசாரணை செய்யவுள்ளது.

இதற்கிடையே ஆசாத் ராஃப் பல பெண்கள் தன்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டதாகவும் இந்தப்பெண் அந்த போட்டோவை வைத்துக் கொண்டு புகழாசைக்காக இந்தப் புகாரை தெரிவித்துள்ளார் என்று மறுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :