பாரம்பரிய கிறிஸ்மஸ் திண்பண்டமாக விளங்கும் புட்டிங்கை வீட்டில் எளிதாக செய்ய தயாராகுங்கள். உதிர்த்த ப்ரெட் துகள்களை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் உலர்ந்த திராட்சை, முந்திரி, கிஸ்மிஸ், பிஸ்தா, சக்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து மிருதுவாக கைகளால் கிளறவும். இந்த கலவையுடன் முட்டைகளை (நன்கு அடித்த) சேர்த்து கிளறவும்.