வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌கி‌றி‌ஸ்ம‌ஸ்
Written By Webdunia
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (13:08 IST)

சாக்லெட் கேக்

கிறிஸ்மஸ் என்றாலே நினைவுக்கு வருவது சுவைமிகுந்த கேக்குகள் தான். எனவே கிறிஸ்மஸ் நன்னாளில் எளிய முறையில் சாக்லெட் கேக் செய்து அசத்துங்கள்.



தேவையானவை:

மைதா - 1 கப்
கோகோ - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 250 கிராம்
முட்டை - 2
சக்கரை - 1/2 கப்

ஐசிங் (அலங்கரிப்பு)

சக்கரை - 1 கப்
கோகோ - 1 ஸ்பூன்
பால் - 2 ஸ்பூன்
வெண்ணெய் (நன்றாக அடித்தது ) - 2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ, சக்கரை, நன்றாக அடித்த வெண்ணெய் (நன்றாக அடித்த) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

நன்கு அடித்த முட்டையை இந்த‌க் கலவையுடன் சேர்த்து கிளறி மைக்ரோ அவனில் 25-35 நிமிடம் வரை 160 டிகிரியில் வைத்து இறக்கவும்.

ஐசிங் செய்ய......

பொடித்த சக்கரை, கோகோ, பால் மற்றும் வெண்ணெய்யை (மிருதுவாக அடித்தது) கலந்து வைத்துகொள்ளவும்.

சதுரவடிவிலான பட்டர் ஷீட்டை கோன் வடிவில் செய்து அதில் இந்த ஐசிங் கலவையை நிரப்பி, உங்களுக்கு விருப்பமான விதத்தில் தயார்செய்த சாக்லெட் கேக்கை அலங்கரிக்கவும்.