Webdunia|
Last Updated:
சனி, 22 பிப்ரவரி 2014 (21:00 IST)
மயிலின் அழகையும், அது தோகை விரித்தாடும் கலையையும் பற்றி கவிஞர் பாரதிதாசன் தனது மொழியின் மூலம் மேலும் அழகு சேர்த்துள்ளார்.
அழகிய மயிலே, அழகிய மயிலே அஞ்சுகம் கொஞ்சி, அமுத கீதம் கருங்குயி லிருந்து விருந்து செய்யக் கடிமலர் வண்டுகள் நெடிது பாடத் தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில் அடியெடுத் தான்றி அங்கும் பதாடு கின்றாய் அழகிய மயிலே. உனது தோகைஒளிர்சேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம். உள்ளக் களிப்பின் ஒளிiயின் கற்றை உச்சியில் கொண்டையாய் உயர்ந்தோ என்னவோ, ஆடுகின்றாய், அலகின் நுனியில் வைத்த உன் பார்வை மறுபசாயல்உன் தனிச்சொத்து, ஸபாஷ், குரகோஷம்.
ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள் ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவமரகத உருக்கின் வண்ணத் தடாகம் ஆனஉன் மெல்லுடல் ஆடல் உள்உயிர் இவைகள் என்னை எடுத்துப் போயின, இப்போது என் நினைவு என்னும் உலகில் மீண்டேன், உனக்கோர் விஷயம் சொல்வேன், நீயஇயற்கை அன்னை இப்பெண் கட்கெலாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தான், உனக்கோ கறையொன் றில்லால் கலாப மயிலே நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தான், இங்குவா, உன்னிடம் இன்னதைச் சொன்னேன், மனதிற் போட்டுவை, மகளிர் கூட்டம் என்னை ஏசும் என்பதற் காக.
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி திருந்தா வகையிற் செலுத்தலால் அவர்கள் சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே.