தேடிச் சென்று கற்கணும்

Webdunia|
காலை நேரம் பள்ளிக்கு
கணக்காய் நீயும் போகணும்
சோலை வண்டின் சுறுசுறுப்பை
சொத்து போல காக்கணும்!

ஆசான் கூறும் கருத்தினை
அன்பால் கேட்டு ஒழுகணும்
வேடம் போடும் குணமின்றே
வேகும் தீயில் போடணும்

அறிவு நிரம்பக் கொள்வது
அனைவர் மதிக்கச் செய்திடும்
செறிவு நிறைந்த புத்தகம்தேடிச் சென்று கற்கணும்

திட்டம் கொண்ட செய்கையால்
கட்ட வேண்டும் இனிய வாழ்வு
சட்டம் காக்கும் குடிமகனால்
சுகந்தனில் நீயும் வாழணும்


இதில் மேலும் படிக்கவும் :