இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

Webdunia| Last Modified திங்கள், 25 அக்டோபர் 2010 (17:20 IST)
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

திருவ‌ள்ளுவரை‌ப் ப‌ற்‌றி அ‌றிய‌ப்ப‌ட்ட செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச் சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர்.

கடவு‌ள் வா‌ழ்‌த்து
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவி ஆகிய பெரிய கடலை கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டா‌ர். முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாக செ‌ய்‌தி‌க‌ள் வா‌யிலாக அ‌றிகிறோம்.


இதில் மேலும் படிக்கவும் :