ஆறு

Webdunia|
ஊரின் வெளியே ஆறு - அது
ஓடும் அழகைப் பாரு!
மாரி பொழிந்தால் வெள்ளம் - கரை
புரண்டு ஓடும் எல்லாம்!

ஓய்வு சிறிதும் இல்லை - அது
ஓய்ந்தால் வருமே தொல்லை!
ஆய்வு செய்தால் நிறைய - ஞானம்
பிறக்கும் மடமை மறைய!

மலையின் மீது தோன்றி - ஊற்று
நீராய் வருமே தாண்டி!கலையாய் பூக்கள் எங்கும் - மலர
நீரும் போயே தங்கும்

துள்ளிக் குதித்து ஆடும் - தங்கப்
பாப்பா நீரில் ஓடும்!
பள்ளி செல்லும் நேரம் - தேனீ
போல விரைந்து போகும்!

தடைகள் வந்தால் ஆறு - அவற்றைத்
தகர்த்துச் செல்லும் கேளு!மடைகள் திறந்து நீராய் - வெல்லும்
படையாய் இருக்க வாராய்!


இதில் மேலும் படிக்கவும் :