டாமியால் கற்ற பாடம்

குழந்தைகளுக்கான சிறுகதை

Webdunia| Last Modified வெள்ளி, 24 ஜனவரி 2014 (17:25 IST)
நாலாவது படிக்கும் மாதங்கிக்கு விளையாட்டுல ஆர்வம் அதிகம். நல்லா பாட்டும் பாடுவா. ஆனா அவ மக்கு மாதிரி நடந்துப்பா. பாடம் படிக்க சொன்னா ரொம்ப கஷ்டப்படுவா. மதிப்பெண்ணும் கம்மியா வாங்குவா. படிக்க சொல்லி அவளோட அப்பா, அம்மா பலமுறை சொல்லிட்டாங்க. ஆனா அவ கேட்கல. படிக்க உட்காரவே மாட்டா.

அவளுக்கு அவங்க வீட்டு நாய் டாமி மேல ரொம்ப இஷ்டம். அதோடதான் எப்பவும் சுத்திக்கிட்டு இருப்பா. ஸ்கூல் நேரம் தவிர மத்த நேரத்துல அது கூடதான் இருப்பா. எங்க வெளையாட போனாலும் அத கூட்டிட்டு போயிடுவா. டாமிக்கும் மாதங்கி மேல ரொம்ப பிரியம். மாதங்கி படிக்கலேன்னு அதுக்கும் கவலை. ஆனா அதுக்கு பேச முடியாதே. என்ன பண்றதுன்னு புரியாம இருந்துச்சு.
ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்துச்சு. அன்னிக்கு லீவு. அதனால மாதங்கி டாமிய அழைச்சிட்டு ஊர் ஓரமா இருக்கற ஆத்தங்கரைக்கு போனா. அம்மா கிட்ட சொன்னா அனுப்ப மாட்டாங்க. அடி விழும். அதனால யாருக்கும் சொல்லாம டாமிய கூட்டிக்கிட்டு கிளம்பிட்டா.

டாமிக்கு இன்னைக்காவது மாதங்கிக்கு படிப்பு பத்தி புரியணும்னு ஆசை. ஆனால் என்ன பண்றது? சாமிய மட்டும் வேண்டிச்சு. ரெண்டு பேரும் ஆத்தங்கரை ஓரமா நின்னாங்க. மாதங்கிக்கு தெரியும். இந்த ஆறு ஆழம்னு. அப்பா சொல்லியிருக்காரு. அதனால டாமியோட ஓரமா நின்னு ஆத்த வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தா.
தூரத்துல எதிர்முனையில அவ கூட படிக்கற பாபு வர்றது தெரிந்துச்சு. அவன் ஆத்துக்குள்ள போறத மாதங்கி பார்த்துட்டா. ‘அய்யோ... அவனுக்கு நீச்சல் தெரியாதே’ன்னு நினைச்சா. “பாபு... பாபு...” அப்படின்னு கத்தினா. அவன் காதுல வாங்கல. ஆத்துல போய் நீச்சல் அடிக்கறாப்புல உட்கார்ந்தான். ஒரு அலை வந்துச்சு. அவன் உள்ளே இழுத்துச்சு. இன்னும் வேகமா கத்தினா.


இதில் மேலும் படிக்கவும் :