உ‌ங்களு‌க்கான ‌விடுகதைக‌ள்

Webdunia| Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2010 (15:51 IST)
விடுகதைக‌ள் சொ‌ல்வது‌ம், கே‌ட்பது‌ம் ‌மிகவு‌ம் சுவார‌ஸ்யமானவை. அவ‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்றை இ‌ங்கே பா‌ர்‌க்கலா‌ம்.

கே‌ள்‌வி

1. மரமு‌ண்டு ஆனா‌ல் ‌கிளை‌யி‌ல்லை., மட்டையுண்டு ஆனா‌ல் கட்டையில்லை; பூவுண்டு மணமில்லை. அது என்ன?
2. கண்ணாடிக் குண்டு காற்றிலே பறக்குது; கையால் தொட்டால் காணாமல் போகுது. அது என்ன?
3. டாக்டர் வந்தாரு ஊசி போட்டாரு; நோய‌ப் பர‌ப்‌பி‌ட்டு காசு வாங்காமல் பறந்து போயிட்டாரு. அவர் யாரு?4. உச்சியிலே பச்சைத் தோகை; நெ‌ளி‌ந்து வளை‌ந்த உட‌ல், ஆனா‌ல் ம‌யி‌ல் அ‌ல்ல அது என்ன?
5. ஓடும் ஆனால் இருக்கும் இடத்தை விட்டு நகராது. அது என்ன?
6. பச்சை உடை அணிந்திருப்பாள்; பசுந்தளிர் தின்றிடுவாள். அது என்ன?

‌‌விடைகளை‌க் காணு‌ங்க‌ள்

1.வாழை மரம்2.நீர்க்குமிழி
3.கொசு
4.கரும்பு
5.கடிகாரம்
6.கிளி


இதில் மேலும் படிக்கவும் :