‌விடுகதைக‌ளு‌க்கு ‌விடை தெ‌ரியுமா?

Webdunia| Last Modified திங்கள், 21 டிசம்பர் 2009 (18:00 IST)
‌‌விடுகதை சொ‌ல்வது உ‌ங்களு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல் இ‌ங்கே ‌சில ‌விடுகதைக‌ள்.

1. அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?
2. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ. அது என்ன?
3. தச்சன் செய்யாத கதவு, மூடினாலும் திறந்தாலும் சப்தம் வராத கதவு. அது என்ன?
4. முதுகை தொட்டால் மூச்சு விடுவான்: பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?
5. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன? 6. சிகப்பு பைக்குள் தங்க காசுகள். அது என்ன?

விடைக‌ள்

1.தலைவகிடு
2.வாழைப்பூ
3.கண் இமை
4.ஆர்மோனியம்
5.வெண்டைக்காய்
6.மிளகாய்


இதில் மேலும் படிக்கவும் :