விடுகதைக்கு விடை தெரியுமா குழந்தைகளே?

Webdunia|
இ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை சொ‌ல்‌லி‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் சாம‌ர்‌த்‌திய‌த்தை‌க் கா‌ட்டு‌ங்க‌ள்.

1. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

2. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?

3. காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?

4. தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
5. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?

6. காற்றிலே பறக்கும் கண்ணாடி குண்டு, தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன?

7. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?

8. ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?
9. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?

10. நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?

விடைக‌ள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்...


இதில் மேலும் படிக்கவும் :