வழக்கம்போல ஒரு கிராமத்தில் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார் சூஃபி ஞானி. அவர்களில் ஒரு பெண்மணி மிகவும் சோகமாக காணப்பட்டாள். அவளை கவனித்த ஞானி அவளுக்கு என்ன வருத்தம் என்று கேட்டார். என் கணவர் கொஞ்சமும் தன்னம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். மரணத்துக்கு பயப்படுகிறார் என்று சொல்லி வருத்தப்பட்டாள்.