திருட்டு சிறார்கள்

Webdunia| Last Modified புதன், 30 ஜனவரி 2008 (15:56 IST)
மலேசியாவில் உள்ள ஜோகூர் என்ற மாகாணத்தில் சுமார் 8 சிறார்கள் ஒரு பேருந்தை திருடி அதில் சுற்றுலா சென்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சாலையில் சிறுவன் ஒருவன் பேருந்தை ஓட்டிச் செல்வதை பார்த்த காவலர் ஒருவர் பேருந்தை மடக்கிப் பிடித்து நிறுத்தினார். அதில் இருந்த சிறுவர்கள் பேருந்தை விட்டு ஓடத் துவங்கினர்.

காவலரும் விடாமல் அவர்களை துரத்திச் சென்று பிடித்து விசாரணை செய்தார்.

விசாரணையில், அந்த சிறுவர்கள் விளையாட்டிற்காக ஒரு பேருந்தை திருடியதாகவும், பின்னர் அதில் சுற்றுலா போன்று பல இடங்களுக்குச் செல்ல தீர்மானித்ததாகவும் கூறியுள்ளனர்.
அந்த 8 சிறார்களுக்கும் 11 முதல் 14 வயதுதான் இருக்கும். பேருந்தை ஓட்டிய சிறுவனுக்கு 13 வயதுதான் ஆகிறதாம்.

வேண்டாமே விபரீத விளையாட்டு


இதில் மேலும் படிக்கவும் :