சொல்வதை திருந்தச் சொல்

webdunia photoWD
இதனைக் கேட்ட சஃபி, ம‌ன்ன‌ர் உ‌ன்னை அழை‌த்து ஜோ‌திட‌ம் பா‌ர்‌க்க சொ‌ன்னா‌ல் ம‌ன்ன‌ரிட‌ம் நீ இவ்வாறு சொல் என்றார். அதாவது ''மன்னா உங்களுக்கு ஆயுள் கெட்டி. நீங்கள் உங்கள் உறவினர்களையெல்லாம் விட நீண்ட நாட்கள் உயிர் வாழ்வீர்கள்'' என்று கூறு என்றார்.

அந்த நபரும் அவ்வாறே சொல்லி பொன்னையும் பொருளையும் பரிசாக வாங்கி வந்தான்.

எனவே எதையும் சொல்லும் விதத்தில் சொன்னால் வெற்றி உங்களுக்குத்தான்.
Webdunia| Last Modified திங்கள், 30 ஜூன் 2008 (12:06 IST)
ஃபி ஞானி தனது சீடர்களுடன் நல்ல நெறிகளை பரப்பும் வகையில் பயணங்கள் மேற்கொள்வார்.
அவ்வாறு ஒரு நாட்டிற்குச் சென்றபோது, மரத்தின் அடியில் ஒருவர் மிகுந்த கவலையுடன் அமர்ந்திருந்தார்.அவரைப் பார்த்ததும், அவருக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று எண்ணிய சஃபி, அருகே சென்று, ''ஏன் இவ்வளவு கவலையாகக் காணப்படுகின்றீர்கள்?' என்று வினவினார்.அதற்கு அந்த நபர் கவலை தோய்ந்த முகத்துடன், 'நானும் எனது நண்பரும் ஜோதிடம் பார்ப்பவர்கள். என் நண்பனை இந்நாட்டு மன்னர் அழைத்து ஜோதிடம் கேட்டார். என் நண்பன் சொன்ன ஜோதிடத்தை கேட்டு மன்னர் கோபமுற்று என் நண்பனை சிறையில் தள்ளிவிட்டார். தற்போது ஜோதிடம் பார்க்க என்னை அழைத்துள்ளார். அதையேத் தான் நானும் சொல்ல வேண்டி இருக்கும். ஏனெனில் அதுதான் உண்மை. என் கதி என்னவாகுமோ' என்று வருந்தினான்.அதற்கு, ம‌ன்ன‌னிட‌ம் உன் நண்பன் என்ன கூறினான் என்று சூஃபி கேட்டார். மன்னரிடம் "உங்களுக்கு பெருந்துயரம் நிகழப் போகிறது. உங்களுடைய உறவினர்கள் எல்லாம் உங்களுக்கு முன்பாகவே இறந்துவிடுவார்கள். நீங்கள் அவர்களுக்கு இறுதிக் கடன் செய்வீர்கள்'' என்று கூறியுள்ளான்.


இதில் மேலும் படிக்கவும் :