சிலவற்றுக்கு சில காரணங்கள்

Webdunia| Last Updated: புதன், 19 பிப்ரவரி 2014 (22:59 IST)
ஒரு ‌‌சில ‌விஷய‌ங்களை‌ப் ப‌ற்‌றி நம‌க்கு‌த் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் அவை எதனா‌ல், எ‌ப்படி நே‌ர்‌ந்தது எ‌ன்பது தெ‌ரியாம‌ல் இரு‌க்கு‌ம். அதுபோ‌ன்ற ‌‌விவர‌ங்களை தேடி‌க் கொடு‌த்து‌ள்ளோ‌ம்.

அவைக‌ள்..

கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய நீர் தேவை. பாலைவனங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால்தான் அங்கு கொசுக்கள் இருப்பதில்லை.

வளர்ப்பு பிராணிகள் வீட்டில் நம்முடனே இருக்கும் காரணத்தால் அவை, நாம் துக்கத்துடன் இருப்பதையும், மகிழ்ச்சியுடன் இருப்பதையும் நன்கு அறிந்து கொள்ளும்.
இந்தியாவுடன் வணிகம் செய்ய வசதியாக கடல் பாதையைக் கண்டுபிடிக்கவே கொலம்பசுக்கு உதவி செய்தா‌‌‌ர் ஸ்பெயின் அரசி இஸபெல்லா.

நாய்கள் எதிரிகளின் வருகையைக் கண்டறிவதற்காகத்தான் காற்று வீசும் திசைக்கு எதிராகவே படுக்கின்றன.

ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவர் 1865ஆம் ஆண்டு பெயர் சூட்டப்பட்டதுதான் எவரெஸ்ட் சிகரம்.
உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாத போது ஏற்படும் சுவாச சிக்கலால்தான் விக்கல் ஏற்படுகிறது.

அதிக களைப்பு ஏற்பட்டு, மூளைச் சோர்வு அடையும் காரணத்தினால்தான் கொட்டாவி ஏற்படுகிறது.

உணவுத் துணுக்குகள் சுவாசப் பாதையில் பாதை மாறி நுழையும் காரணத்தினால்தான் நமக்கு பொறை ஏறுதல் ஏற்படுகிறது.
நன்றாக மென்று உண்ண முடியாத காரணத்தினால்தான் மாடுகள் அசை போடுகின்றன.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :