உலகப் புகழ்பெற்ற பார்பிக்கு வயது 50

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:40 IST)
குழ‌ந்தைகளாலு‌ம், பெ‌ண்களாலு‌ம் பெ‌ரிது‌ம் ‌விரு‌ம்ப‌ப்படு‌ம் புகழ்பெற்ற பார்பி பொம்மை‌ நேற்று 50 வயதை தாண்டியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1959ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி, விளையாட்டு பொருட்கள் கண்காட்சி ஒன்றில் பார்பி பொம்மை அறிமுகப்படுத்தப்பட்டது.

இளம் வயது நாகரீக பெண்ணாக தோற்றமளிக்கும் பார்பி பொம்மையின் அனை‌த்து அ‌ம்ச‌ங்களு‌ம் ‌அனைவரையு‌ம் கவ‌ர்வதாக இரு‌க்கு‌ம்.

பார்பியின் உண்மையான பெயர் பார்பி மில்லிசென்ட் ராபர்ட்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த வர்த்தக துறை பெண் ரூத் ஹாண்ட்லர்தா‌ன் இ‌ந்த பொ‌ம்மையை உருவா‌க்‌கினா‌ர். அத‌ற்கு, ஜெர்மனியின் பைல்டு லில்லி என்ற பெண் பொம்மைதா‌ன் அவரு‌க்கு தூ‌ண்டுதலாக இரு‌ந்து‌ள்ளது.
இதுபோ‌ன்ற எ‌த்தனையோ பொ‌ம்மைக‌ள் த‌ற்போது ‌வி‌ற்பனை‌யி‌ல் இரு‌ந்தாலு‌ம் பா‌ர்‌‌பி‌க்கு எ‌ப்போது‌ம் மவுசு அ‌திக‌ம்தா‌ன்.

பா‌ர்‌பி‌‌யி‌ன் 50‌ வயது ‌கொ‌ண்டா‌ட்ட‌ம் ‌பா‌ர்‌பி பொ‌ம்மைகளை உருவா‌க்க‌ம் ‌நிறுவன‌த்‌தி‌ல் ‌சிற‌ப்பாக நடைபெ‌ற்றது.


இதில் மேலும் படிக்கவும் :