உயிர் பிழைக்க விவேகம் வேண்டும்

Webdunia| Last Modified செவ்வாய், 24 ஜூலை 2007 (12:24 IST)
ஒரு முறை சீன தேசத்தில் ஊடுருவிய ஓர் ஆக்கிரமிப்புப் படை, ஒரு நகரத்தைப் பிடித்துக் கொண்டது. ஒரு தாவோ மடத்தின் வயதான தலைமைக் குருவைத் தவிர மற்றவாகள் அனைவரும் தப்பியோடிவிட்டனர்.

தலைமைக் குருவை ஆக்கிரமிப்புப் படையின் தளபதியின் முன் கொண்டு வந்து நிறுத்தினர் வீரர்கள்.

நீங்கள் ஏன் தப்பியோடவில்லை என்று கேட்ட தளபதி, என்னைப் பற்றித் தெரியும்ல? கண் இமைப்பதற்குள் என் வாள் வீச்சில் உங்கள் தலையைத் துண்டாக்கி விடுவேன் என்றான்.

நீங்கள் அப்படிச் செய்தால் நான் எப்போதுமே கண் இமைக்க மாட்டேன் என்று தலைமைக் குரு அமைதியாகக் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :