வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2016 (15:48 IST)

விமானக் கடத்தல் படத்துக்கு பாகிஸ்தானில் தடை

விமானக் கடத்தல் படத்துக்கு பாகிஸ்தானில் தடை

1986 -இல் மும்பையிலிருந்து அமெரிக்கா சென்ற பயணிகள் விமானத்தை கராச்சியில் தீவிரவாதிகள் கடத்தினர். அப்போது பயணிகளை காப்பாற்ற முயன்ற விமானப் பணிப்பெண் நீர்ஜாவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.


 
 
இந்த உண்மைச் சம்பவத்தை நீர்ஜா என்ற பெயரில் இயக்குனர் ராம் மத்வானி படமாக்கியுள்ளார். நீர்ஜாவாக சோனம் கபூர் நடித்துள்ளார்.
 
இந்த வாரம் 19 -ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை பாகிஸ்தானில் வெளியிட பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானை படத்தில் மோசமாக சித்தரித்திருப்பதாகக் கூறி படத்தை அவ்வரசு தடை செய்துள்ளது.