சன்னி லியோன் படத்துக்கு ஏ சான்றிதழ்


Mahalakshmi| Last Modified சனி, 11 ஏப்ரல் 2015 (14:24 IST)
சன்னி லியோனை வைத்து படம் எடுக்கிறார்கள் என்றால், ஃபேமிலி ஆடியன்ஸ் அந்தப் பக்கமே திரும்புவதில்லை. படம் எடுப்பவர்களுக்கும் அதில் கவலையில்லை. அவர்களின் டார்கெட், இளசுகள், பெரிசுகள்.
 
 
சன்னி லியோன் இந்திய சென்சார் அனுமதிக்கும் அளவு கவர்ச்சி காட்டி நடித்திருக்கும் படம், ஏக் பஹேலி லீலா. சன்னி லியோன் அரைகுறையாக இருக்கும் போஸ்டரை போட்டுத்தான் விளம்பரம் செய்கிறார்கள். 
 
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார், ஏ சான்றிதழ்தான் தர முடியும், அதுவும் ஒரு காட்சியை கத்தரிக்க வேண்டும் என கூற, அதுக்கென்னங்க எசமான், தாராளமாக ஏ தாங்க என்று படக்குழு கேட்டு வாங்கியிருக்கிறது. சன்னி லியோனின் படத்துக்கு ஏ இல்லாவிட்டால் எவன் தியேட்டருக்கு வருவான்?
 
ஏப்ரல் 10 சன்னியின் லீலைகளை திரையில் பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :