1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 28 ஜூன் 2015 (11:38 IST)

திருமண வரவேற்பு - முன்னாள் காதலிகளை அழைக்கும் ஷாகித் கபூர்

நடிகர் ஷாகித் கபூருக்கு அடுத்த மாதம் திருமணம். டெல்லியில் நடக்கும் இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.


 

 
மும்பையில் ஜுலை 12 பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வில் பாலிவுட்டின் அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்கள்.
 
இந்த நிகழ்ச்சிக்கு தனது முன்னாள் காதலிகள் அனைவரையும் அழைக கதிட்டமிட்டுள்ளார் ஷாகித் கபூர்.
 
வித்யா பாலன், ப்ரியங்கா சோப்ரா, கரீனா கபூர் என்று இந்தியின் முன்னணி நடிகைகள் பலருடன் ஆழமான காதல் கொண்டிருந்தார் ஷாகித் கபூர். கரீனா கபூரும் இவரும் பொது இடத்தில் காதலைமீறிய காமத்துடன் முத்தமிட்டுக் கொண்டது சரித்திர நிகழ்வு. அதேபோல் ப்ரியங்கா சோப்ராவுடனான காதல்.
 
நவீன ஆட்டோகிராஃப் போலிருக்கப் போகிறது ஷாகித் கபூரின் திருமண வரவேற்பு.