படவாய்ப்புக்காக டேட்டிங்கா? பிரபல நடிகையின் அசத்தல் ஐடியா


Abimukatheesh| Last Updated: சனி, 20 மே 2017 (21:47 IST)
தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் டேட்டிங் செல்ல ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

 
தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் தமன்னா, டாப்ஸி போன்று பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறாராம். 
 
இதற்காக ஒரு அசத்தலான ஐடியாவும் தன் கைவசம் வைத்துள்ளார். அண்மையில் இவரிடம், எந்த ஹீரோவுடன் டேட்டிங் செல்ல விருப்பம் என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் தெலுங்கு சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் கூறியதாவது:-
 
யாருடனாவது டேட்டிகங் செல்ல வேண்டுமென்றால் அது ரன்வீர் சிங்தான். அவருக்கு முத்தம் தரவும் தயாராக உள்ளேன், என்று கூறியுள்ளார்.
 
தமன்னா ரன்வீர் சிங்-க்கு பட விழா ஒன்றில் முத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :