ராஜ்நீதி இரண்டாம் பாகம் - பிரகாஷ் ஜா தகவல்


Suresh| Last Updated: திங்கள், 30 நவம்பர் 2015 (16:05 IST)
இராமாணயத்தை தழுவி எடுக்கப்பட்ட இராவணன் படம் தோல்வியடைந்தது. 2010 -இல் மகாபாரதத்தை தழுவி ராஜ்நீதி படம் வெளியானது.

 

 
அரச பதவிக்கான போட்டியில் பாண்டவர்களும், கௌரவர்களும் அடித்துக் கொண்டதை அடிப்படையாக வைத்து இந்திய அரசியலை சொன்ன படம்.
 
பிரகாஷ் ஜா இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
 
படம் வெளிவந்த காலத்தில், இந்தி சினிமாவின் சிறந்த அரசியல் படங்களுள் ஒன்று என அனைவரும் பாராட்டினர்.
 
ராஜ்நீதியின் இரண்டாவது பாகத்தை எடுக்கயிருப்பதாக பிரகாஷ் ஜா அறிவித்துள்ளார்.
 
இரண்டாவது பாகத்தையும் அரசியல் பின்னணியுடனே அவர் எடுக்கிறார். நிகழ்கால அரசியல் மாற்றங்கள் அவரது இரண்டாவது பாகத்தில் பிரதிபலிக்கும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் பிரகாஷ் ஜா.


இதில் மேலும் படிக்கவும் :