தொடர்புடைய செய்திகள்
- இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க விரும்பும் இந்தோனேஷியா.. பிரதமர் மோடி முன் ஒப்பந்தம்...
- காமேனி இறுதிச்சடங்கு!.. பிரதமர் மோடிக்கு அழைப்பு?.. ஈரான் செல்வரா?..
- தங்கம் வாங்காதீங்க!.. மோடி சொல்லியும் மக்கள் கேட்கலயே!.. அட போங்கப்பா!...
- பிரதமர் மோடி சொல்லியும் தங்கம் வாங்குவதை குறைக்காத இந்தியர்கள்.. இறக்குமதி அளவு அதிகரிப்பு...!
- ஜவஹர்லால் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி.. உலக தலைவர்கள் வாழ்த்து...!
இந்தோனேஷியாவின் 1000 ஆண்டு பழமையான இந்து கோவிலில் பிரதமர் மோடி.. புனரமைப்பு பணிகள் தொடக்கம்..
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள, 1000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க பிரம்பானன் இந்து கோவிலுக்கு சென்று இன்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்காக கட்டப்பட்ட இந்த உலக புகழ்பெற்ற ஆன்மீக தலத்தை பிரதமர் மோடி பார்வையிட்டதோடு, அதன் தொன்மை மாறாமல் பாதுகாக்கும் புதிய புனரமைப்பு திட்டத்தையும் முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்திய அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இந்தோனேசியாவின் பாரம்பரிய சின்னத்தை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முன்னதாக, இந்த பிரம்மாண்ட கோவில் வளாகத்தின் ஒட்டுமொத்த அழகிய காட்சியை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்தபடியே வான்வழியாக கண்டு ரசித்தார். இந்த நிகழ்வு இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார மற்றும் ஆன்மீக உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
உலக பாரம்பரிய சின்னமான பிரம்பானன் கோவிலை புதுப்பிப்பதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பண்டைய இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையை போற்றிப் பாதுகாப்பதில் இந்தியா கொண்டுள்ள அர்ப்பணிப்பு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த ஆன்மீக பயணம் உலகெங்கிலும் உள்ள ஆன்மீகப் பிரியர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
Edited by Siva
