வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Cauveri Manickam
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (11:27 IST)

பாலிவுட்டில் படமாகும் தமிழ்க்கதை

உண்மையிலேயே நடந்த தமிழ்க்கதை ஒன்று, பாலிவுட்டில் படமாக எடுக்கப்படுகிறது.

 
 
கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், குறைந்த விலையில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்தவர். இவர் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்து, குறைந்த விலையில் நாப்கினை விற்பனை செய்ய ஆரம்பித்த பிறகுதான், கிராமப்புறங்களில் நாப்கின் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தது. இதனால், கடந்த வருடம் மத்திய அரசு இவருக்கு  ‘பத்மஸ்ரீ’ பட்டம் வழங்கி கவுரவப்படுத்தியது. 
 
இந்தக் கதையை, ஹிந்தியில் படமாக எடுக்கிறார் இயக்குநர் பால்கி. ஹீரோவாக அக்‌ஷய் குமாரும், ஹீரோயினாக ராதிகா ஆப்தேவும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்காக முருகானந்தத்திடம் பேசி, அவருடைய வாழ்க்கை வரலாறு முழுவதையும் தெரிந்து கொண்டு கதை எழுதியுள்ளார் பால்கி.