நானா படேகரின் மரணம் இயற்கைக்கு மாறான மரணமா? கோவா போலீசார் வழக்குப்பதிவு..
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் கோவாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். கோவாவின் டோனா பவுலாவில் உள்ள வீட்டில் மயங்கி கிடந்த அவரை உடனடியாக மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரை போராடி இதய துடிப்பை மீட்டெடுக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள அவரது ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாகப் பனாஜி காவல் துறையினர் நானா படேகரின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 194-ன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலை 8.07 மணிக்கு மருத்துவமனை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், காவல் அதிகாரி நிதின் நாயக் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை வெளியான பிறகே வழக்கின் அடுத்தகட்டப் பிரிவுகள் மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

