வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (10:55 IST)

'அப்படி' நடித்ததில் அக்ஷய்க்கு பெருமையாம்

'அப்படி' நடித்ததில் அக்ஷய்க்கு பெருமையாம்

ரோஹித் தவான் இயக்கத்தில் இரண்டு வாரம் முன்பு டிஸ்யூம் படம் வெளியானது. ஜான் ஆபிரஹாம், வருண் தவான், அக்ஷய் கன்னா என்று பவர் ஸ்டார் காஸ்ட். இருந்தும் 100 கோடி வசூலிக்க திக்கி திணறுகிறது படம்.


 
 
இந்தப் படத்தில் அக்ஷய் குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான வேடம் என்பார்களே... 
 
இதில் அக்ஷய்க்கு உண்மையிலேயே வித்தியாசமான வேடம். படத்தில் அவர் ஓரினச்சேர்க்கையாளராக - கே யாக நடித்திருந்தார்.

இந்த வேடம் பற்றி குறிப்பிட்ட அவர், என் சினிமா கரியரில் டிஸ்யூம் படத்தில் கே யாக நடித்ததை பெருமையாக கருதுகிறேன். என்னுடைய சமகால நடிகர்கள் யாரும் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்கிறார்கள். துணிச்சலாக இந்த வேடத்தில் நடிக்க ரசிகர்கள் மீதான நம்பிக்கையே காரணம் என்றார்.
 
ரசிகர்கள் இன்னும் நிறைய உங்ககிட்ட எதிர்பார்க்கிறாங்க பாஸ்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்