வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Caston
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2015 (10:12 IST)

டிம்பிள் கபாடியா, டுவிங்கிள் கன்னா - ஒன்றாக நடிக்கும் தாய், மகள்

டிம்பிள் கபாடியாவுக்கு அறிமுகம் தேவையில்லை. அதேபோல் அவரது மகள் டுவிங்கிள் கன்னா. இரண்டு பேருக்கும் இந்தியில் என்ன மார்க்கெட் என்றால், ரொம்ப கம்மிதான். ஆனால், தாயும், மகளும் சேர்ந்தால்... அது தலைப்புச் செய்தி.


 
 
டிம்பிள் கபாடியாவுக்கும், ராஜேஷ் கன்னாவுக்கும் பிறந்தவர் டுவிங்கிள் கன்னா. 2001 -இல் இவருக்கும் நடிகர் அக்ஷய் குமாருக்கும் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
டிம்பிளையும், டுவிங்கிள் கன்னாவையும் வைத்து நகைக்கடை விளம்பரம் ஒன்று தயாராகிறது. தாயும், மகளும் சேர்ந்து நடித்தால் விளம்பரம் பியத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் இந்த விளம்பரத்தை எடுக்கிறார்கள்.
 
எதிர்பார்த்தது போலவே, விளம்பரம் தயாராகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.