சைனா பாக்ஸ் ஆபிஸ் டாப் 10-ல் தூம் 3

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (18:02 IST)
விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் அமீர் கான், அபிஷேக் பச்சன், கத்ரினா கைஃப் நடித்த தூம் 3 சைனா பாக்ஸ் ஆபிஸின் டாப் 10-ல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தூம் 3 படம்தான் இந்தியாவில் தயாரான படங்களில் அதிகம் வசூல் செய்த படம். இந்தியாவில் மட்டும் 284 கோடிகள் அளவுக்கு திரையரங்குகள் மூலம் வசூலித்தது. சமீபத்தில் துருக்கியில் வெளியான படம் அங்கும் கலெக்ஷனில் பட்டையை கிளப்பியது.
 
கடந்த 25-ம் தேதி தூம் 3 சைனாவில் வெளியானது. முதல் மூன்று தினங்களில் 1.35 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸின் டாப் 10-ல் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. சைனா பாக்ஸ் ஆபிஸில் இதுவரை எந்த இந்தியப் படமும் டாப் 10-க்குள் இடம் பிடித்ததில்லை.
 
சைனா பாக்ஸ் ஆபிஸில் அங்கு தயாராகும் படங்களும், ஹாலிவுட் படங்களும் மட்டுமே கோலோச்சும். முதல்முறையாக அந்த கோட்டைக்குள் நுழைந்துள்ளது தூம் 3. 
 
சைனா மார்க்கெட் இந்திய சினிமாவின் சந்தைப் பரப்பை மேலும் விஸ்தரிக்கும் என்பதால் இதுவொரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :