1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 1 ஜூலை 2014 (21:05 IST)

மூன்று நாளில் ஐம்பது கோடியை தாண்டிய ஏக் வில்லன்

பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜுன் 27) வெளியான ஏக் வில்லன் முதல் மூன்று தினங்களில் இந்தியாவில் மட்டும் ஐம்பது கோடிகளை தாண்டியுள்ளது.
ரிதேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர் நடித்த ஏக் வில்லன் ஒரு ரொமான்டிக் த்ரில்லர். படத்தின் ட்ரெய்லரே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை படம் வெளியானது. மொத்தம் 2539 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டனர்.
 
முதல்நாளான வெள்ளிக்கிழமை 16.72 கோடிகளை படம் வசூலித்தது. இரண்டாவது நாளான சனிக்கிழமை 16.54 கோடிகள். ஞாயிற்றுக்கிழமை 17.44 கோடிகள். மொத்தமாக 50.70 கோடிகள்.
 
இந்த வருடத்தின் டாப் ஓபனிங்கில் ஏக் வில்லனும் இடம் பிடித்துள்ளது.
 
படம் நன்றாக இருப்பதால் இந்த வாரமே 100 கோடியை படம் எட்டிப் பிடிக்க சாத்தியமுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.