அண்ணனுடன் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் பாபி தியோல்

Mahalakshmi| Last Updated: சனி, 11 ஏப்ரல் 2015 (14:54 IST)
அழகும் திறமையும் இருந்தும் சில நட்சத்திரங்கள் எப்போதும் ஐயோ பாவ நிலையிலேயே இருப்பார்கள். பாலிவுட்டில் அப்படியொரு நடிகர், பாபி தியோல். தர்மேந்திராவின் மகன், சன்னி தியோலின் தம்பி என்று பின்புலம் பலமாக இருந்தும் படங்கள்தான் சரியாக இல்லை.
பாபி தியோல் கடைசியாக நடித்தப் படம் இரண்டு வருடங்களுக்குமுன் வெளிவந்தது. இரண்டு வருடங்களாக அவுட்ஆஃப் போகஸில் இருந்தவர், மீண்டும் நடிக்க வருகிறார். அண்ணன் சன்னி தியோலுடன் இணைந்து அவர் நடிக்கும் படத்தை, விளம்பரப்படங்களை இயக்கும் விவேக் சௌகான் இயக்குகிறார்.

இது தர்மேந்திரா குடும்பத்தின் சொந்த தயாரிப்பு என்பது முக்கியமானது.


இதில் மேலும் படிக்கவும் :