ஜாஸ்பாவில் ஷபனா ஆஸ்மியுடன் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்


Mahalakshmi| Last Modified சனி, 11 ஏப்ரல் 2015 (15:03 IST)
ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படம், ஜாஸ்பா. சஞ்சய் குப்தா இயக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ஷபனா ஆஸ்மி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 
 
 
ஜாஸ்பா ஒரு ஆக்ஷன் த்ரில்லர். இர்பான் கான் பிரதான வேடத்தில் வருகிறார். படம் முழுக்க ஐஸ்வர்யா ராயுடன் வரும் இன்னொரு நடிகர், ஜாக்கி ஷெராப். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராயும், ஜாக்கி ஷெராப்பும் இணைந்து நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்துக்குப் பிறகு கரண் ஜோஹரின் படத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார், ஐஸ்வர்யா ராய். இதுவொரு ரொமாண்டிக் ட்ராமாவாக தயாராக உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :