வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2016 (17:38 IST)

அம்மா ஐஸ்வர்யா ராயின் கவர்ச்சி கட்டுப்பாடுகள்

அம்மாவானால் ஐஸ்வர்யா ராயானாலும் மாறித்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது. கவர்ச்சியில் முத்துக்குளித்த இந்த முன்னாள் அழகியும் இப்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கிறார்.
 

 
கரண் ஜோஹரின் புதிய படத்தில் ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இந்தப் படத்தில் ரன்பீருடன் அவருக்கு ஒரு முத்தக்காட்சி உண்டு. ஆனால், அதில் நடிக்க மாட்டேன் என்று உதட்டை இறுக்கமாக மூடிக் கொண்டார் ஐஸ்வர்யா ராய். 
 
தாயான பிறகு கண்டபடி நடிக்கக் கூடாது என்ற சுயகட்டுப்பாட்டில் முத்தத்துக்கு தடை விதித்தவர் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். கவர்ச்சி உடைகள், படுக்கையறை காட்சி, பிகினி உடை போன்றவற்றிலும் நடிக்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.
 
இந்த ட்ரெஸ் கோட் பாலிவுட்டுக்கு சரிவருமா? பேசாம தமிழ், மலையாளத்துக்கு வந்திடுங்களேன்.